நாமலின் காதலியா இவர்?

அதிசய உலகம்

OMG!!

மேலும்..

நாமல் ராஜபக்ஸவின் சகோதரர்களுல் ஒருவரான ரோஹித ராஜபக்ஸவுக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம்.எதிர்காலம் தொடர்பில் எதுவித இலக்குமில்லாமல்-கவலையுமில்லாமல் பிளேய் போயாக வலம் வரும் ஒருவர்.

கலைகளுடன் அவருக்கு ஈடுபாடு உண்டு.இசை அல்பங்கள் தயாரிப்பது அவரது பொழுதுபோக்குகளில் ஒன்று.அண்மையில் அவர் தயாரித்த இசை அல்பம் ஒன்றில் அவரது மூத்த சகோதரர் நாமல் ராஜபக்ஸவை நடிக்க வைத்த செய்திதான் இன்றைய அரசியல் அரங்கில் கிசுகிசுவாக சுற்றுகிறது.அந்த அல்பத்தில் நடித்த யுவதிதான் அந்த கிசுகிசுவுக்குப் பிரதான காரணம்.

நுவரெலியாவில் படப்பிடிப்பு.அன்றைய தினம் மஹிந்த ராஜபக்ஸவும் நாட்டில் இல்லை தாயும் வீட்டில் இல்லை.

ஒரே போரிங் நாமலுக்கு.இந்த போரிங்கைப் போக்குவதற்காக தன்னுடன் நுவரலியாவுக்கு வருமாறு ரோஹித அழைத்ததும் உடனே சென்றுவிட்டார் நாமல்.

அங்கே சென்றதும் ஒரு யோசனை தோன்றியது ரோஹிதவுக்கு.நாமலை அந்த இசை அல்பத்தில் நடிக்க வைத்தால் என்ன என்பதுதான் அந்த யோசனை.நாமலிடம் அதைக் கூறியதும் அவரும் சம்மதித்தார்.

அண்ணன்,தம்பி இருவரும் இணைந்து அந்த அல்பத்தில் நடித்து முடித்தனர்.இதுவொரு மேட்டரல்ல.அந்த அல்பத்தில் கதாநாயகியாக நடித்த யுவதிதான் மேட்டர்.

ஆம்,அந்த யுவதி வேறு யாருமல்ல நாமலின் காதலியாம்.இந்தச் செய்தியை சிலர் பரப்பிவிட்டனர்.

இதைப் பார்த்து பதறிப்போன நாமல் அவருக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.நான் அவரை முதன்முதலாகப் பார்த்ததே படப்பிடிப்பு தளத்தில்தான் என்று இப்போது மறுப்பறிக்கை விட்டுக்கொண்டிருக்கின்றார்.

அரசியல் பரபரப்புக்கு மத்தியில் சின்ன சின்ன கிளுகிளுப்பு இருக்கத்தானே வேணும்.

[எம்.ஐ.முபாறக்-சிரேஷ்ட ஊடகவியலாளர்]

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்