தூங்கினால் மரணம்: வினோதமான நோயால் அவதிப்படும் வாலிபர்

அதிசய உலகம்

C'nt control laugh

மேலும்..

பிரித்தானிய நாட்டில் தூங்கினால் உயிரை பறிக்கும் வினோதமான நோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் தனது இறுதி நாட்களை எண்ணிக்கொண்டு வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள Gosport நகரில் வசித்து வரும் Liam Derbyshire(17) என்ற வாலிபரை தான் இந்த வினோதமான நோய் தாக்கியுள்ளது.

வாலிபர் பிறந்த நாள் முதல் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி பெரும் சித்ரவதையை அனுபவித்து வருகிறார்.

குறிப்பாக, Central Hypoventilation Syndrome என்னும் விசித்திரமான நோய் இந்த வாலிபரை தாக்கியுள்ளது.

உலக மக்கள் தொகையில் 1,500 நபர்களை மட்டுமே தாக்கும் இந்த அரிதான நோயின் தன்மையால் வாலிபரின் பெற்றோர் ஒவ்வொரு நாளும் நரகத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்த நோய் தாக்கியுள்ள நபர் தூங்கினால் அவரது நுரையீரல் செயல்பாடு முற்றிலுமாக நின்றுவிடும் அபாயம் உள்ளது.

இதுமட்டுமில்லாமல், இதயத்துடிப்பின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுவதுடன் இரத்தக்கொதிப்பும் ஏற்படும் வாய்ப்புள்ளது.

இந்நோய் குறித்து பாதிக்கப்பட்ட வாலிபரின் தாயார் பேசும்போது, ‘இந்த விசித்திரமான நோய் தாக்கியுள்ள எனது மகன் தூங்கினால், மூளைக்கு செல்லும் நரம்புகளின் செயல்பாடுகள் நின்றுவிடும்.

இதனால் உடம்பின் பிற உறுப்புகளுக்கு மூளை எவ்வித கட்டளைகளையும் பிறபிக்க முடியாது. குறிப்பாக, மூச்சு விடவும் மூளை கட்டளையிடாது’ என சோகமாக கூறியுள்ளார்.

 

வாலிபரின் தந்தை பேசியபோது, ‘எனது மகன் பிறந்தது முதல் இப்போது வரை ஒவ்வொரு இரவும் கடைசி இரவாகவே தோன்றுகிறது.

ஒரு நாள் கூட நிம்மதியாகவும், முழுமையாகவும் நாங்கள் தூங்கியது இல்லை. மகனின் எதிர்காலத்தை நினைத்தால் மிகவும் அச்சமாக இருக்கிறது’ என கவலை தெரிவித்துள்ளார்.

வாலிபரை பரிசோதனை செய்து வரும் மருத்துவர் பேசியபோது, ‘வாலிபரின் எதிர்காலம் நிச்சயத்தன்மை இல்லாதது. ஒவ்வொரு முறை வாலிபர் படுக்கைக்கு செல்லும்போது ‘உயிரை பாதுகாக்க உதவும் கருவிகளை’ பொருத்திய பின்னர் தான் தூங்க முடியும்.

இச்சாதனங்கள் பொருத்தாமல் தூங்கினால், அதுவே கடைசி தூக்கமாகவும் இருக்க வாய்ப்புள்ளது’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்