உலகின் மிகப்பெரிய ரோஜா செடி…

அதிசய உலகம்

Bigg Boss 18th August..

மேலும்..

உலகிலேயே மிகப்பெரிய ரோஜா செடி அரிசோனாவில் உள்ள டம்ப்ஸ்டோனில் இருக்கிறது.

இந்த ரோஜா செடியின் அடிப்பாகம் 12 அடி அகலம். 9 ஆயிரம் சதுர அடி தூரத்திற்குக் கிளை பரப்பியிருக்கிறது.

1885 ஆம் ஆண்டில் நடப்பட்ட இந்தச் செடிக்கு 132 வயது என்றாலும், இன்றும் வசந்த காலத்தில் பூத்துக்குலுங்கிக்கொண்டிருக்கிறது.

1884 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஹென்றி கீயும் அவருடைய மனைவி மேரியும் அமெரிக்கா வந்தனர்.

அழகான பூக்கள் நிறைந்த தங்களின் ஸ்காட்லாந்து தோட்டத்தை நினைத்து ஏங்கினார் மேரி.

ஸ்காட்லாந்துக்குக் கடிதம் எழுதினார். ஒரு பெட்டி நிறைய செடிகளும் விதைகளும் அரிசோனாவுக்கு வந்து சேர்ந்தன.

மேரியின் பக்கத்து வீட்டுக்காரர் அமெலியா ஆடம்சனுக்கும் நட்புக்காக ஒரு ரோஜா செடியைப் பரிசாக அளித்தார் மேரி.

இருவரும் செடிகளைத் தங்கள் தோட்டத்தில் நட்டனர்.

அரிசோனா பாலைவனப் பிரதேசம் என்பதால் அங்கே ரோஜா போன்ற செடிகள் வளர வாய்ப்பில்லை என்று அதுவரை கருதப்பட்டு வந்தது.

ஆனால், ரோஜா செடி செழித்து வளர்ந்ததோடு மட்டுமின்றி, உலகின் மிகப் பெரிய ரோஜா செடி என்ற பெயரையும் பெற்றுவிட்டது.

1920 ஆம் ஆண்டு அந்த வீட்டிற்கு ஜேம்ஸும் எதெல் மசியாவும் குடிவந்தனர். அப்போதே ரோஜா மிகப் பெரிய செடியாகக் கிளை பரப்பியிருந்தது.

செடியின் வளர்ச்சிக்கு உதவும் விதத்தில் இந்தத் தம்பதியர், உலோகக் கம்பிகளை ஆங்காங்கே வைத்தனர். இதற்குப் பிறகு செடி மேலும் பெரிதாக வளர ஆரம்பித்தது.

1993 ஆம் ஆண்டு ஜான் ஹிக்ஸ், ‘உலகின் மிகப் பெரிய ரோஜா மரம்’ என்று குறிப்பிட்டு, இதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று அறிவித்தார்.

1937 ஆம் ஆண்டு ராபர் ரிப்ளே, ரோஜாவைப் பார்ப்பதற்காக சென்றார். பிரமித்துப் போனார். அவர் மூலம் ‘உலகின் மிகப் பெரிய ரோஜா செடி’ என்ற கின்னஸ் சாதனையும் எளிதாகக் கிடைத்துவிட்டது.

இன்றுவரை இந்த சாதனையை வேறு எந்த ரோஜா செடியும் முறியடிக்கவில்லை.

ஒவ்வொரு வருடமும் மார்ச் முதல் ஏப்ரல் வரை ஆறு வாரங்கள் ரோஜாக்கள் பூக்கின்றன.

இந்த நிகழ்வை ஒரு விழாவாக நடத்தி வருகிறார்கள்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்