திருமணம் ஆன ஆண்கள் மீது பெண்களுக்கு அப்படி என்ன ஈர்ப்பு..? : பெண்களுக்கானது..,(18+)

காதல் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கும் யார் மீது வேண்டுமானாலும் வரும். காதலுக்குக் கண்கள் இல்லை என்பதற்கு திருமணம் ஆன ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படக்கூடிய காதலே ஒரு உதாரணம்.

திருமணம் ஆன ஆண்களைக் படித்த, படிக்காத என அனைத்து தரப்பு பெண்களும் காதலிக்கின்றனர் என்பது மறுக்க முடியா ஒரு உண்மை. இப்படிப்பட்ட காதல்களின் பின்னணியை காண்போம்…

தன் தந்தையின் குணாதிசயங்களால் ஈர்க்கப்பட்டு, அவர் மீது அதிக அன்பும்,பாசமும் கொண்ட பெண்கள் பலரும் தனக்கு வரப்போகும் கணவனுக்கும் அதை போன்றுதான் குணங்கள் இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள்.

அவர்கள் எதிர்பார்பதுபோன்ற குணாதிசயங்களை கொண்ட ஒரு ஆணை சந்திக்க கூடிய பெண், அவன்தான் தன் வாழ்க்கைத் துணையாக வரவேண்டும் என்று நினைப்பார்கள்.

ஏற்கனவே அந்த ஆணுக்கு திருமணம் ஆனாலும் அதை கூட அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. குழந்தை போன்ற மனம் கொண்ட பெண்கள் இதுபோன்ற உறவுகளுக்கு சுலபமாக அடிமையாகி விடுகிறார்கள்.

அவர்களுடைய குழந்தைத் தனங்களையும், தவறுகளையும் சகித்துக் கொள்வதற்கு தன்னைவிட அதிக வயது மூத்த ஆணை தேடுகிறார்கள் அப்படிப்பட்ட பெண்கள். அதற்காக அந்த ஆண் திருமணம் ஆனவராக இருந்தாலும் கவலைப்படுவதில்லை.

குழந்தைப் பருவத்திலிருந்து பெற்றோருடைய அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறாத பெண்கள் பருவ வயதை அடைந்த பின்னர் அந்த அன்பும், அரவணைப்பும் திருமணமான ஒரு ஆணிடம் கிடைக்கும் போது அவனிடம் தன்டையே இழந்துவிடுகிறார்.

உடல் மற்றும் இனக்கவர்ச்சிகளும் கூட இந்த வகை உறவுகளுக்கு ஒரு காரணம். திருமணம் ஆன ஆணிடம் சாதாரண நட்பாக தொடங்கும் இப்பழக்கம் நாளடைவில், காதலாகி, உடலுறவில் போய் முடியவும் வாய்ப்புள்ளது.

விரும்பியதை எல்லாம் அடைந்தே தீர வேண்டும் என்றும், அதற்காக எதை வேண்டுமானாலும் விலையாகக் கொடுக்கத் தயார் என நினைக்க கூடிய பெண்களும் இத்தகைய உறவுகளில் திருமணம் ஆனவர் என்று தெரிந்த பிறகும் தங்களுடைய சுயநலத்தின் காரணமாக அவரின் குடும்பம் பற்றிப் பெரிதாகக் கவலைப்படுவதில்லை.

வேலைக்குச் செல்லக்கூடிய பெண்களில் சிலரும் திருமணம் ஆன ஆண் ஊழியர்களிடம் காதலில் விழ அதிகம் வாய்ப்புள்ளது. தன்னுடைய மனைவியைப் பற்றி சதா குறை சொல்லிக் கொண்டும், விமர்சனம் செய்து கொண்டும் இருக்க கூடிய ஆண்களை நம்பியும் அவர்கள் வலையில் சுலபமாக விழுந்துவிடுவார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்