மீண்டும் புதிய சர்ச்சை: தமிழக முதல்வரின் ஆட்சி கவிழுமா?

அதிசய உலகம்

Bigg Boss 18th August..

மேலும்..

அ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலர் தினகரனின் பதவி செல்லாது எனவும் அது சட்ட விரோதமானது எனவும் முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று கூடிய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில் தினகரன் அணியைச் சேர்ந்த 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது.

பிளவுபட்ட அ.தி.மு.க கட்சியில் பழனிசாமி அணியினரும், ஓ.பி.எஸ் அணியினரும் தினகரனை முற்றாக ஓரம் கட்டும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தினகரனுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டினை இரு அணியினரும் கொண்டுள்ளதால் ஆட்சிக்கு எவ்வகையில் நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்பது குறித்து தினகரன் அணியினர் ஆலாசனை செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக தினகரனால் பதவி பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை இராஜினாமா செய்வது குறித்து விவாதித்து வருவதாக தெரிவிக்கப்படுவதோடு, அவ்வாறான நிலை ஏற்படுமாயின் பழனிசாமி ஆட்சி கவிழ்வது நிச்சயம் என தினகரன் தரப்பு தெரிவித்து வருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்