அனைத்து மதம் மற்றும் சமயங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் திருகோணமலையில்..

அதிசய உலகம்

Bigg Boss 18th August..

மேலும்..
(செய்தியாளர்:-அப்துல்சலாம் யாசீம்)
இலங்கையில் அனைத்து சமயங்கள் மற்றும் அனைத்து இனங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (12) திருகோணமலை ரிங்கோ வாடி வீட்டில் நடை பெற்றது.
பிரித்தானிய  உயரஸ்தானிகர் அலுவலகத்தின் நிதியுதவியுடனும் ஆசிய பவுண்டேஷனின் உதவியுடன் தேசிய சமாதானப்பேரவையும்.சக்தி அமைப்பும் இணைந்து இக்கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது.
இக்கலந்துரையாடலில் அனைத்து மதங்களையும்  சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு ஏனைய மதங்கள் பற்றிய ஆய்வொன்றினை மேற்கொண்டு ஒவ்வொரு மதங்களும் சொல்கின்ற போதனைகள் பற்றியும் கருத்துகள் பற்றியும் அவரவர் பெற்றுக்கொண்ட  அனுபவங்கள் பற்றியும் பகிர்வொன்று இடம் பெற்றது.
இந்நிகழ்வில் ஆசிய பவுண்டேசன் இணைப்பாளர் செல்வி.கமாயா தேசிய சமாதான பேரவையின் இணைப்பாளர் துசந்ரா விஜயநாதன்.சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் திருமதி.சதுராணி.திருமதி.பிரிஜட் ஆகியோருடன் மதத்தலைவர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்