கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு அடித்தது ஜாக்பாட் : அரசு அதிரடி அறிவிப்பு!

கலப்புத் திருமண முறையை ஊக்குவிக்கும் வகையில் கலப்பு திருமண செய்யும் தம்பதியினருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பிற்கு சமூக ஆர்வலர்களிடையே பெரும்பான்மையான வரவேற்பு கிடைத்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் சாதி வேறுபாடுகளை களையவும், சமூகத்துவம் ஏற்படும் வகையிலும் சாதி மறுப்பு கலப்பு திருமணத்தை ஒடிசா அரசு ஊக்குவித்து வருகிறது.

அதன்அடிப்படையில் கலப்பு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே இத்திட்டம் நடைமுறையிலுள்ள நிலையில், தற்போது பரிசு தொகையை 10 ஆயிரத்திலிருந்து 1 லட்சமாக உயர்த்தியுள்ளது.

கடந்த 2007ம் வருடம் கலப்பு திருமணம் செய்து கொள்வோருக்கான தொகை ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக ஒடிஷா அரசு உயர்த்தியது.

இந்தத் தொகையினை கலப்பு திருமண தம்பதிகள் பெறுவதற்கு, திருமணம் செய்து கொண்டவர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

மேலும், இத்தொகை பணமாக அவர்களது கையில் கொடுக்கப்பட மாட்டாது.

அவர்களுக்கு நிலமாகவோ அல்லது வீட்டுக்குத் தேவையான பொருட்களாகவோ வழங்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்