இந்த திருகோணமலை வாலிபருக்கு வயது 18 !! இவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி இது

திருகோணமலை துறைமுகப்பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனையாவெளிப்பிரதேசம் யாட் அடைவீதியில் இன்று முற்பகல் இளைஞரொருவர் தற்கொலை செய்து கொண்டள்ளார். இன்று முற்பகல் 11 மணியளவிலேயே இவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
18 வயதுடைய ரேமன சரோன் குயின்டன் என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலையில் மகன் வேலைக்கு செல்லாததால் தான் கடிந்து கொண்டதாகவும் கோயிலுக்கு சென்று திரும்பி வந்து மகனை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டதாகவும் தற்கொலை செய்துகொண்டவரின் தாயார் தெரிவித்தார்.
மேலும் 10.00 மணிதொடக்கம் 10.30 வரையிலான காலப்பகுதில் தற்கொலை செய்துகொண்ட நபர், அவசரமாக போன் காட் ஒன்றை கொள்வனவு செய்து போனதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இறந்தவரின் தொலைபேசி லொக் செய்யப்பட்டிருப்பதனால் தற்கொலை செய்துக்கொண்டமைக்கான காரணத்தை அறிவதில் சிரமம் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்