இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் முதலுதவிச்சேவை:நூற்றுக்கணக்கான மக்கள் பயன்

அதிசய உலகம்

Is that tamizhisai

மேலும்..

பூநகரி – செபஸ்ரீயார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நிகழ்வின் போது இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் கிளிநொச்சிக்கிளையினால் முதலுதவிச்சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளதுடன், பூநகரி மண்ணித்தலை செபஸ்ரீயார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா வருடாந்தம் ஆகஸ்ட் மாதம் 07 நாட்கள் நடைபெற்றுள்ளது.

குறித்த திருவிழா கடந்த 23 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளிநொச்சிக்கிளையினால் பகல், இரவுச் சேவையாக மேற்கொள்ளப்பட்ட முதலுதவியில் நூற்றுக்கணக்கான மக்கள் பயன்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்