உதயன் பல்சுவைக் கலைவிழா 2017 :கனடா ஸ்காபுறோ நகரில்

உதயன் பல்சுவைக் கலைவிழா 2017 கடந்த சனிக்கிழமை கனடா நாட்டின் ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள பெரிய சிவன் ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பட்டிமன்றம் திரு ராஜா தலைமையில் சிறப்புப் பட்டிமன்றம் ” சிறந்த வாழ்க்கைத் துணைக்கு அன்பா அறிவா தேவை? என்னும் தலைப்பில் நடைபெற்றது.
கனடா வாழ் பேச்சாளர்கள் திருவாளர்கள் கணபதி ரவீந்திரன், டாக்டர் போல் ஜோசப், கவிஞர் புகாரி மற்றும் திருமதி கோதை அமுதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பட்டிமன்றத்தை சபையில் அமர்ந்திருந்த அனைவரும் இறுதவரை அமர்ந்திருந்து ரசித்தனர்.
நட்சத்திரா இசைக்குழுவினர் சிறந்த இசைநிகழ்ச்சியை வழங்கினர். நடனம் மற்றும் சிறப்புக் கௌரவிப்பு ஆகியன இடம்பெற்றன.
இந்த விழாவை சிறப்பாகவும் அழகுறவும் நடத்த ஆதரவு வழங்கிய வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் நண்பர்கள் மேடையில் கௌரவிககபபட்டனர்.
கனடா உதயனின் கடந்த 21 ஆண்டு பயணத்திலும் ஏற்பாடு செய்த முன்னைய விழாக்களிலும் இவ்வருட விழா சிறப்பாக இடம்பெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்