திருச்சி சிறையில் என்னை நிர்வாணப்படுத்தினார்கள் :மாணவி வளர்மதியின் உள்ள குமுறல்…!!

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டு பிரசுரம் கொடுத்தார் என்பதற்காக கல்லூரி மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் அவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்தார்.

சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அரியலூர் மாணவி அனிதாவுக்கு ஆதரவாகவும் நீட்டுக்கு எதிராகவும் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த வளர்மதியிடம் பிரபல தமிழ் இதழ் ஒன்று பேட்டி கண்டுள்ளது. அந்த பேட்டியில் முன்னதாக சிறைகளில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பேசியுள்ளார் மாணவி வளர்மதி.

முன்னதாக திருச்சி சிறையில் வளர்மதியை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்ததாகவும், கோவை சிறையில் வளர்மதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாகவும் செய்திகள் பரவின. இது குறித்து வளர்மதியிடம் கேட்கப்பட்டது.

அதற்க்கு பதில் அளித்த போராளி வளர்மதி திருச்சியில் நடந்தது உண்மைதான் என கூறினார். நான் வெளிப்படையாக கூறுவதால் எனக்கு மட்டும் தான் அப்படி நடந்ததாக நினைக்க வேண்டாம். சாதாரண வழக்குல சிறைக்கு செல்பவர்களுக்குக்கூட இந்த கொடுமைகள் நடக்கின்றன.

ஒரு பெண் கூனிக்குறுகி மற்றவர்கள் முன்னிலையில் நிர்வாணமா நிற்கும் மனநிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எல்லா சிறைச்சாலைகளும் இப்படித்தான் இருக்கின்றன.

ஆனால், கோவையில் இதுபோன்ற கொடுமைகளுக்கு நான் ஆளாக்கப்படவில்லை. ஆனால் வேறுவிதமான தொல்லைகள் கொடுத்தார்கள் என வளர்மதி கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்