43 ஆவது தேசிய விளையாட்டு நிகழ்வில் கராத்தே போட்டியில் முல்லை இளைஞன் வெண்கலப் பதக்கம்

43 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான கராத்தே போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட இளைஞன் வெண்கலப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
விளையாட்டு துறை அமைச்சினால் நடத்தப்படும்  43வது தேசிய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான கராத்தே போட்டி நிகழ்வு கண்டி மாவட்டத்தில் திகன பிரதேசத்தில் இம் மாதம்  6ஆம், 7 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
இப் போட்டி நிகழ்வில் வடமாகாணது;துPனு; முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த  எம். குமார் வெண்கலப்  பதக்கதை பெற்று கொண்டார். இவர்  84-75  நிறை பிரிவில் வடமேல் மாகாண வீரருடன் காலிறுதிப் போட்டியில் மோதி  7-4 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றிபெற்று தேசிய ரீதியிலான வெண்கல பதக்கத்தை பெற்று கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்