கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லம் சிரமதானப் பணி…

(டினேஸ்)

புலம்பெயர் சமூகத்தினர் தூங்காமல் விழித்திருக்க வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சியின் உப தலைவரும் மட்டு அம்பாறை மாவட்ட பிராந்திய இணைப்பாளருமான கே. பிரபாகரன் குறிப்பிட்டிருந்தார்.

இன்று 09.09 கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்ல முதலாம் கட்ட சிரமதானம் பணியின் பின்னரான செய்தியாளர்கள் சந்திப்பின் போதெ அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்..

நாங்கள் தற்போது அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்ல சிரமதானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டுள்ளோம் அதேபோல்  அனைவரும் அறிந்த விடயம் கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ள மூன்று துயிலுமில்லங்கள் துப்பரவு செய்துள்ளோம் மட்டு அம்பாறையில் அமைந்துள்ள நான்காம் துயிலுமில்லம் தான் கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லம் அதனை இன்று நாம் முதற்கட்ட துப்பரவுப் பணியில் மாவீர குடும்பத்தினர் முன்னால் போராளிகள் பொது மக்கள் ஆகியோர்களின் ஒத்துழைப்புக்களுடன் இந்த துப்பரவுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.

கடந்த மூன்று மாதமாக துயிலுமில்ல துப்பரவுப் பணியை ஆரம்பித்து படிப்படியாக நான்காவது கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லத்தை துப்பரவு செய்ய ஆரம்பித்துள்ளோம் ஆனால் எமது சமூகம் புலம்பெயர் சமூகம் இன்னும் நித்திரை விட்டு எழும்பவில்லை என நாங்கள் கருதுகின்றோம் நித்திரை தூங்கிக் கொண்டுள்ளவர்கள் இங்கே போராளிகள், மாவீரர் குடும்பங்களும் தங்களுடனே இருந்து வீரச்சாவினை தழுவிக்கொண்டிருந்தவர்களை நினைவு கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வளவு காலமாக செயற்படுத்தப்பட்ட சிரமதானப் பணியின் நினைவு கூறுவதற்காக வழிவகைகள் எதுவும் எமது புலம்பெயர் சமூகமோ தேசத்தில் உள்ள தொழில் அதிபர்களோ சமூகத்தினரோ உதவி புரியவில்லை துரதிஸ்ட வசமாக இத்தனை மாதங்கள் கடந்தும் எமது நினைவுகளை செய்யக்கூடிய அளவிற்கு சமூகம் ஒத்துழைப்பு வழங்கவில்லை இருந்தும் இந்த வருடத்திலிருந்து மாவீரர் துயிலுமில்லங்களை பேணி பாதுகாத்து அவர்களது கனவுகளை எங்களது நினைவுகளில் சுமந்து நினைவு கூறுவதற்காக சகல ஏற்பாடுகளையும் செய்வோம் என இந்த இடத்தில் கூறிக்கொள்கின்றோம் என ஜனநாயக போராளிகள் கட்சியின் உப தலைவரும் மட்டு அம்பாறை மாவட்ட பிராந்திய இணைப்பாளருமான கே. பிரபாகரன் கருத்துத் தெரிவித்தார்.

. ,

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்