மன்னார் பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு:-நோயாளர்கள் சிரமம்.(படம்)

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து –மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள்    இன்று செவ்வாய்க்கிழம(12) காலை  முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் மன்னார் பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
சைட்டம் மருத்துவக்கல்லூரியை மூடக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் மாவட்ட மட்டத்திலான  3 நாள்  எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்  வகையில் மன்னார் மாவட்ட  அரச வைத்திய அதிகாரிகள் பணி ப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை, மற்றும் தலைமன்னார்,பேசாலை,முருங்கன் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
-குறிப்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்பகிஸ்கரிப்பின் காரணமாக மன்னார் பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த மக்கள் பல்வேறு சிரமத்திற்கு முகம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்