அடையாள வேலை நிறுத்தத்துக்கு தயாராகும் மின்சாரசபை ஊழியர்கள்.

அதிசய உலகம்

Original bhakupali

மேலும்..

அடையாள வேலை நிறுத்தத்துக்கு தயாராகும் மின்சாரசபை ஊழியர்கள்.

இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் நாளை முதல் இரண்டு நாட்கள் அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை அறிவித்துள்ளனர்.
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மின்சாரசபை ஊழியர்கள் மேற்கொள்ளவுள்ள குறித்த அடையாள வேலை நிறுத்தம் நாளை நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

பாவனையாளர்களின் மின் பட்டியலை சீரான முறையில் கணக்கிட்டு மின் கட்டணத்தை அறவிடல்,மின்சாரசபை ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்த்தல் மற்றும் சபையின் ஊழியர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய சேமலாப நிதியை வைப்பில் இடுதல் ஆகியனவே மின்சார சபை ஊழியர்களின் கோரிக்கைகள் ஆகும்.
மின்சார சபையின் உயர் அதிகாரிகளின் சுகபோக செலவுகளை பூர்த்தி செய்யும் வகையில் பாவனையாளர்கள் மீது ஐம்பது வீத மேலதிக கட்டணம் விதிக்கப்படுவதாக இன்று நடைபெற்ற மின்சார சபை ஊழியர்களின் செய்தியாளர் சந்திப்பில் குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டது.

அத்துடன் மின்சார சபை ஊழியர்களின் சம்பள பணத்தில் இருந்து பிடிக்கப்பட்ட 2000 மில்லியன் ரூபா இதுவரை ஊழியர் சேமலாப நிதியத்தில் வைப்பில் இடைப்பட்டவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே தமது கோரிக்கைகளை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் நிறைவேற்றி தராது போனால் பதினைந்தாம் திகதி தொடக்கம் தொடர் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்போவதாகவும் மின்சாரசபை ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்