இந்தியா முதல் இடத்தை பிடிக்க ஆஸ்திரேலியாவை 4-1 வீழ்த்த வேண்டும்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தர வரிசையில் தற்போது தென் ஆப்பிரிக்கா 119 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தலா 117 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளது. ரேட்டிங் பாயிண்ட் அடிப்படையில் ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், இந்தியா 3-வது இடத்திலும் உள்ளன.

வீராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றினாலே இந்தியா முதல் இடத்தை பிடித்துவிடும். 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் போது 120 புள்ளிகளை பெறும். 5-0 என்ற கணக்கில் இந்தியா வென்றால் 122 புள்ளிகளை பெறும். இந்த தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் வென்றால் 118 புள்ளிகள் பெற்று 2-வது இடத்துக்கு முன்னேற முடியும்.

அதே நேரத்தில் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கிலோ 4-1 என்ற கணக்கிலோ இந்தியாவை வீழ்த்தினால் தர வரிசையில் முதல் இடத்தை பிடித்துவிடும்.

ஸ்டீபன்சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஆட்டம் வருகிற 17-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்