வவுனியாவில் மழை காரணமாக வான் பாயும் சமணங்குளம்.

அதிசய உலகம்

Original bhakupali

மேலும்..
கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக வவுனியா சமணங்குளம் வான் பாய்ந்துள்ளது.
வவுனியாவில் தொடர்ச்சியாக வறட்சி வாட்டி வந்ததுடன் கடும் குடிநீர்த்தட்டுப்பாடும் நிலவி வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இடியுடன் கூடிய பெய்த கடும் மழை காரணமாக வவுனியாவில் சமணங்குளம் வான் பாய்கிறது.
இதன் காரணமாக பெரும்போக பயிர்ச்செய்கைக்கு தேவையான நீர் கிடைத்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி வெளியிட்டனர்.
அத்துடன் குடிநீர் தட்டுப்பாடு நீங்கியுள்ளதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் சமணங்குளத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் நிலத்தடி நீரை பாதுகாப்பதில் குறிப்பிட்ட குளம் பெரும் பங்குவகிப்பதாக மேலும் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்