தலவாக்கலை பகுதியில் வேன் மோதி ஒருவரை பலியாக்கிவிட்டு தலைமறைவான சாரதி பொலிஸாரால் கைது

அதிசய உலகம்

Original bhakupali

மேலும்..

(க.கிஷாந்தன்)

தலவாக்கலை பகுதியில் வேன் மோதி ஒருவரை பலியாக்கிவிட்டு தலைமறைவான சாரதி 13.09.2017 அன்று இரவு தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும், சந்தேக நபரையும், குறித்த வேனையும் நுவரெலியா நீதி மன்றத்தில் 14.09.2017 அன்று ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்லை லிந்துலை நகரசபைக்கு அருகாமையில் மஞ்சல் கோட்டினை கடந்து கொண்டிருந்தவர் மீது வேன் ஒன்று 13.09.2017 அன்று மாலை 6.30 மணியளவில் மோதிவிட்டு சென்றுள்ளதாகவும், அவர் மரணமடைந்துள்ளதாகவும் சாரதி வேனுடன் தலைமறைவாகியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி வேகமாக சென்று  சென்றுகொண்டிருந்த வேன் ஒன்றே இவ்வாறு மோதி விட்டு தப்பிச் சென்றுள்ளது. இதில் மரணமடைந்த நபர் சுமார் 100 மீற்றர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் லிந்துலை கூம்மூட் பகுதியைச் சேர்ந்த சூசை சந்தனம் (வயது 58) என இனங் காணப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் வேனின் பாகங்களும், மரணமடைந்தவரின் குடையும் கிடந்தன.

சந்தேக நபரை கைது செய்வதற்காக பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தனர் இந்நிலையிலேயே சந்தேன நபரையும், வேனையில் லிந்துலை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்