பெண்கள் வெறுக்கும் ஆண்களின் சில செயல்கள்…

மது, புகையைத் தவிர்த்து பல விஷயங்கள் ஆண்களிடம் பிடிக்காது என்று முகம் சுளிக்கின்றனர் பெண்கள்.
இனி ஆண்களிடம் பெண்கள் அதிகம் வெறுக்கும் செயல்கள் பார்க்கலாம்.
• ஞாயிறு அன்று அலுவலகத்திற்கு மட்டும் அல்ல, குளிப்பதற்கும் விடுமுறை என்ற நடைமுறையை பின்பற்றி வாழ்ந்து வருபவர்கள் ஆண்கள். ஆண்களிடம் பிடிக்காத விஷயங்களில் இது தான் முதலும் முக்கியமானதுமாக பெண்கள் கூறுகின்றனர்.
• பெண்கள் 24 மணி நேரம் சீரியல் பார்த்தால் தவறில்லை. மேலும் 24 மணிநேரம் டிவி பார்ப்பதால் போர் அடிப்பது. ஆனால், ஆண்கள் கிரிக்கெட், புட்பால், ஐ.பி. எல் பார்த்தல் தங்களுக்கு பிடிக்காது என்கின்றனர்.

• பொதுவாகவே ஆண்களிடம் அதிகமாக வியர்வை நாற்றம் வீசும். கோடை காலத்தில் கேட்கவே வேண்டாம். இது பெண்களுக்குப் சுத்தமாக பிடிக்காது என்று முகம் சுளிக்கின்றனர்.
• குறட்டை விடும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை. குறட்டை விடுவது தூக்கத்தைக் கெடுப்பதாகவும், எரிச்சல் அடைய வைப்பதாகவும் கூறுகின்றனர்.
• தன்னை தவிர மற்ற பெண்களை பார்த்து ஜொல் விடும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்