துப்பாக்கிக்கு வேலை வந்தது! கனடா நாட்டில் பொலிஸ் அதிகாரி கத்தி குத்துக்கு இலக்கானார்!

கனடா நாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவரை கத்தியால் குத்திய நபரை மற்றொரு பொலிஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வின்னிபெக் நகரை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு நேற்று மாலை 4 மணியளவில் அவசர தகவல் ஒன்று வந்துள்ளது. குடியிருப்பு ஒன்றில் சோதனை செய்ய வந்த பொலிஸ் அதிகாரியை நபர் ஒருவர் கத்தியால் குத்திவிட்டதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
புகாரை பெற்ற பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். குடியிருப்பில் உயிருக்கு போராடி கொண்டுருந்த பொலிஸ் அதிகாரி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பின்னர், தாக்குதல் நடத்திய நபரை பொலிசார் சுற்றி வளைத்தபோது அவர்கள் மீதும் தாக்குதல் நடத்த நபர் முயன்றுள்ளார்.
 வேறு வழியில்லாத காரணத்தினால் தற்காப்பிற்காக பொலிசாரினால் அந்நபர் துப்பாக்கியால் சுடப்பட்டார். இச்சம்பவத்திற்கு பின்னர் நபரை பொலிசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காத அந்நபர் உயிரிழந்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி இன்னும் அபாயக் கட்டத்தை தாண்டவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும், இவ்வழக்கு தொடர்பாக பொலிசார் கூடுதல் தகவல் எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்