மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய உள்ளுராட்சி மன்றங்களினை உருவாக்க நடவடிக்கை – யோகேஸ்வரன் எம்.பி

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய உள்ளுராட்சி மன்றங்களினை உருவாக்குவதற்கு மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சு உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்

இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இன்று ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்-

தனது வேண்டுகோளின் படி கோறளைபற்று பிரதேச சபை எல்லைக்குள் கோறளைபற்று தெற்கு (கிரான்) மற்றும் கோறளைபற்று மத்தி என இரண்டு புதிய பிரதேச சபைகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும், கோறளைபற்று பிரதேச செயலக பிரிவிற்கு நகர சபை உருவாக்கப்படவும் வேண்டும் எனவும் பாராளுமன்றத்திலும் சம்பந்தப்பட்ட அமைச்சிடமும் நான் பல முறை வலியுறுத்தி கோரியமைக்கு அமைய இப் பிரதேச சபைகளை உருவாக்குவதற்கான முறையான அறிக்கைகளினை சமர்பிக்க மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சினால் அரசாங்க அதிபர், கிழக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சு செயலாளர், மாவட்ட நில அளவை உதவி அத்தியட்சகர், பிராந்திய உதவி உள்ளுராட்சி ஆனையாளர் மற்றும் புள்ளி விபர திணைக்கள அதிகாரி ஆகியோரை கொண்ட உயர் மட்ட நிர்வாக குழு நியமனம் செய்யப்பட்;டுள்ளது.

அக் குழு தமது அறிக்கையினை இம் மாத முடிவுக்குள் அமைச்சுக்கு சமர்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இப் புதிய உள்ளுராட்சி மன்றங்களினை உருவாக்குவதன் மூலம் கோறளைதெற்கு (கிரான்) பிரதேசத்தில் முறக்கொட்டாஞ்சேனை தொடக்கம் குடும்பிமலை வரையான பரந்த பகுதி ஒரு பிரதேச சபையும், அது கோறளைபற்று தெற்கு பிரதேச சபை எனவும்;, கோறளைபற்று மேற்கு பிரதேச சபையில் இணைந்துள்ள கோறளைபற்று தெற்கு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட 5 கிராம அதிகாரி பிரிவுகளும் இணைத்துக் கொள்ளப்படுவதுடன், சபைக்குள்ளும் கோறளைபற்று பிரதேச சபையில் அடங்கும் கோறளைபற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் நிருவகிக்கப்படும் பகுதிகள் கோறளைபற்று மத்தி பிரதேச சபையினுள்ளும் அடங்க கூடியதாகவும், அதாவது பிரதேச செயலாளர்களின் எல்லைகள் பிதேச செயலக எல்லையாக அமையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோறளைபற்று தமிழ் பிரதேச செயலக பிரிவை நகர சபையாக மாற்றுமாறும் அடியேன் அண்மையில் அமைச்சரின் கவனத்திற்கு நேரடியாகவும் பாராளுமன்ற உரையின் மூலமும் விடுத்த வேண்டுகோளின்படி அமைச்சர் உத்தரவு வழங்கியதன் அடிப்படையில் இவ் பிரதேச சபை, நகர சபை நடவடிக்கைகளுக்காக குழு நியமிக்கப்பட்டுள்ளது

இதேவேளை ஏறாவூர்பற்று (செங்கலடி) பிரதேச சபையின் ஒரு பகுதியினை நகர சபையாக மாற்றியும் பதுளை வீதியில் அமைந்துள்ள கிராமங்களை ஒரு பிரதேச சபையாகவும் மாற்று மாறும் வேண்டுகோள் விடுத்துள்ளேன். அத்தோடு களுவாஞ்சிகுடி மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபையினை ஒரு பிரதேச சபை, ஒரு நகர சபை அல்லது இரு பிரதேச சபையாக மாற்றுவதற்கும் மட்டக்களப்பு மாநகர சபையின் ஒரு பகுதியை பிரதேச சபையாகவும் ஏனைய பகுதியை மாநகர சபையாகவும் உருவாக்குவதற்கும் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

இவ்விடயங்களுக்கு உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சு ஆதரவு வழங்கி உறுதி வழங்கியுள்ளதால் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலுக்கு முன் இவைகளை நடைமுறைபடுத்த அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாகவும், இவ்விடயங்கள் தொடர்பாக தொடர்ந்து அமைச்சருடன் பேசி நடவடிக்கையை விரைவுபடுத்துவதாகவும் குறிப்பிட்டார் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்