இணையில்லா அரசியல் செயற்பாட்டாளர் ஈழவேந்தன் அவர்களுக்கு கனடிய தேசத்தில் எடுக்கப்பட்ட பாராட்டு விழா

அதிசய உலகம்

Jolly tutorial training

மேலும்..

ஈழத்தின் மூத்த அறிஞரும் அரசியல் ஈடுபாட்டுடனும் எழுத்து துறை மற்றும் பேச்சு வல்லமையுடனும் தமிழே மூச்சு என “ஈழம் வெல்லும் அதை காலம் சொல்லும்” என்ற தனது தாரக மந்திர வாக்கியங்களுடனும் இளமை முதல் முதுமை வரை எழிமையான வாழ்வுடனும் தனது அறிவாற்றலாலும் விடாது பிடியாய் 85வயதிலும் இளமையில் கற்றதையும் கண்டதையும் உணர்வுடன் உண்மைகளை எடுத்து இயம்பும் தமிழ் ஈழ மறவரான ஈழவேந்தன் ஐயாவுக்கு கனடாவில் தமிழ் தாய் மன்றத்தின் ஏற்ப்பாட்டில் 07 – 10 – 2017 அன்று ஸ்காபுரோவில் அமைந்துள்ள செல்வ சன்னிதி ஆலய விழா மண்டபத்தில் மதிப்பளிப்பும் கெளரவமும் வளங்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஈழவேந்தன் அவர்களின் கல்வி மற்றும் திறன்களையும் மதித்து வருகை தந்திருந்த கல்விமான்கள், மற்றும் தமிழ் பற்றாளர்கள் என பலரும் கூடி ஈழவேந்தன் அவர்களுக்கான வாழ் நாழ் கெளரவத்தினையும் மதிப்பினையும் வழங்கியிருந்தது குறிப்பிடதக்கதாகும்.

ஒரு தமிழின் இமயத்தினை நன்கறிந்து அவருக்காக பல் வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் விழா எடுத்த தமிழ் தாய் மண்ற உறுப்பினர்களுக்கும் கனடா வாழ் தமிழ் மக்கள்; தஙகள் பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்