கருணை கொலையை அங்கீகரிப்பது சாத்தியம் இல்லை – சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்

கருணை கொலைக்கு அங்கீகாரம் வழங்கினால், தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதால், அதற்கு சாத்தியம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியது. கருணை கொலையை அங்கீகரிப்பது சாத்தியம் இல்லை – சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் புதுடெல்லி:
கருணை கொலைக்கு அங்கீகாரம் வழங்கினால், தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதால், அதற்கு சாத்தியம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியது. கடந்த 2005-ம் ஆண்டு, ‘காமன் காஸ்’ என்ற தொண்டு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், ‘நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டவர்கள்,
குணமடைய வாய்ப்பு இல்லாதநிலையில், ஆஸ்பத்திரியில் அவர்களது செயற்கை சுவாச கருவிகளை அகற்றி, அவர்கள் மரணத்தை தழுவ அனுமதிக்கும் கருணை கொலை முறை, பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. அரசியல் சட்டத்தின் 21-வது பிரிவு, வாழ்வதற்கு மட்டுமின்றி, சாவதற்கும் உரிமை வழங்கி இருப்பதால், கருணை கொலை முறைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு, பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு முன்பு நேற்று இம்மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ்.நரசிம்மா வாதிடுகையில் கூறியதாவது:- கருணை கொலை அங்கீகரிக்கப்பட்டால், அது தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
எனவே, அதை பொது கொள்கையாக உருவாக்க முடியாது. ஒருவரது மருத்துவ சிகிச்சையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று தனிநபர்கள் தீர்மானிக்க முடியாது.
ஒருவர் நல்ல மனநிலையில் இல்லாதவராக இருந்தால், அவர் தனது சிகிச்சையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு எடுக்க உகந்தவர் அல்ல. மருத்துவ வாரியம்தான் அதை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். அதுதான் இறுதி அதிகாரம் படைத்தது. அந்த அளவுக்கு அதில் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும். அவற்றை சுப்ரீம் கோர்ட்டே உருவாக்கலாம். இவ்விவகாரத்தில், அருணா ஷான்பாக் என்பவரது வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில், ஒரு வரைவு மசோதாவை உருவாக்கி உள்ளோம். அத்துடன், சட்ட ஆணையமும் சிபாரிசுகளை அளித்துள்ளது.
அவை அரசின் பரிசீலனையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். இந்த மனு மீது இன்றும் விசாரணை நடக்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்