வடமாகாணம் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கான அழைப்பு நாளை

அதிசய உலகம்

Dance girls

மேலும்..

அரசியல் கைதிகளின் நியாயபூர்வமான கோரிக்கைகளை உடனடியாக தீர்க்கப்படவேண்டும் என்று கோரி நாளை மறுதினம் (13-10-2017 ) வெள்ளிக்கிழமை அன்று வடக்கு கிழக்கு மாகாணம் தழுவிய பூரண ஹர்தாலுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த 18 நாட்களாக அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணவிரதம் ,ருக்கும் மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் நியாயபூர்வமான கோரிக்கைகளை ஏற்று அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி கடந்த 04.10.2017 அன்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்; கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டு இருந்தது.இந்நிலையில் இதற்கு உரிய தரப்பினர் அது தொடர்பாக கவனம் செலுத்தி எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எனவே அந்த மூன்று அரசியல் கைதிகளின் மோசமடைந்து வரும் உடல் நிலையை கருத்திற் கொண்டு அவர்களது நியாயபூர்வமான கோரிக்கைகள் உடனடியாக தீர்க்கப்படவேண்டும் என்று கோரி வருகின்ற (13-10-2017) அன்று வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு மாகாணம் தழுவிய பூரண ஹர்தாலுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இப்போராட்டத்திற்கு அனைத்து வர்த்தக சங்கங்கள்,பாடசாலைகள், சிவில் சமூக அமைப்புக்கள், அரச நிறுவனங்கள், ஏனைய தனியார் நிறுவனங்கள் அனைத்தையும் பூரண ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக உரிய தரப்பு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளாதவிடத்து இப்போராட்டத்தை தொடர்ச்சியாக வேறு வடிவங்களில் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் நேரிடும் என்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்