கிரான் பிரதேசத்துக்குட்பட்ட திகிலிவட்டை படகுப் பாதைப் சேவையை முற்றுமுழுதாக இலவசமாக வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

அதிசய உலகம்

Jolly tutorial training

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேசத்துக்குட்பட்ட திகிலிவட்டை படகுப் பாதைப் சேவையை முற்றுமுழுதாக இலவசமாக வழங்குமாறு கோரி நேற்றைய தினம் புதன்கிழமை பிரதேச மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திகிலிவட்டை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் திகிலிவட்டை துறை அருகில் நடைபெற்ற இவ் ஆர்பாட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

திலிகிவட்டை, கோராவெளி, குடும்பிமலை, பெரியவட்டுவான் உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் தினமும் இந்த பாதை ஊடாகவே பயணம் செய்கின்றனர். பயணத்திற்காக ஓரு வழிப்பாதைக்கு நபரொருவருக்கு 10 ரூபாவும் சைக்கிள் மற்றும் வாகனங்களுக்கு வேறாகவும் கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. வெள்ளம் ஏற்படும் காலங்களில் மேலதிக கட்டணங்களும் அறவிடப்படுகின்றன.

குறித்த படகுப் பாதை கோறளைப் பற்றுப் பிரதேச சபையினால் சந்திவெளி புதுப்பிள்ளையார் ஆலய நிருவாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆலய நிருவாகம் குறித்த நடைமுறையை நிறுத்தி சேவையை முற்றுமுழுதாக இலவசமாக வழங்குமாறு கோரியே இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

மாவட்டத்தில் ஏனைய பகுதிகளில் நடைபெறும் படகுப் பாதைப் பயணத்திற்கு கட்டணங்கள் அறவிடப்படடுவதில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

அரசாங்கத்தால் குறித்த பகுதியில் பாலம் அமைப்பதாகத் தெரிவிக்கப்பட்டது, ஆனால் இதுவரை எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. கடந்த அரசாங்கமும் பல வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றியது போலவே நல்லாட்சி என கூறிக்கொள்ளும் அரசாங்கமும் ஏமாற்றுவதாக மக்கள் கவலை வெளியிட்டனர்.

இதன் போது குறித்த இடத்திற்கு வருகைதந்த கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபை செயலாளர் சாலி முகமட் சிஹாப்டீன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார். இவ்விடயம் தொடர்பில் தற்போது முடிவு எடுக்கப்பட முடியாத நிலையில் இருப்பதாகவும். குறித்த கோரிக்கை தொடர்பில் உள்ளுராட்சி திணைக்கள உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி ஒரு வார காலத்தில் அறியத்தருவதாகவும், அதுவரையில் எவ்வித தடங்கலும் ஏற்படுத்த வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்