கிழக்குப் பல்கலையில் இறந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் முதலாண்டு நினைவேந்தல்…

அதிசய உலகம்

Dance girls

மேலும்..

கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று கிழக்குப் பல்கலைக்கழக கலைப் பீட மாணவர் ஒன்றியத்தினால் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
கிழக்குப் பல்கலைக்கழக கலைப் பீட மாணவர் ஒன்றியத்தின் செயலாளரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர் ஒன்றியத் தலைவர் உட்பட நிர்வாக உறுப்பினர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களினால் மெழுகுவர்த்தி ஏற்றி இறந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தபட்டு அவர்களின் ஆத்மசாந்தி வேண்டி மௌனப் பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த வருடம் 20ம் திகதி யாழ் கொக்குவில் பிரதேசத்தில் நள்ளிரவு யாழ் பல்கலைக்கழக மாணவர்களான நடராஜா கஜன், மற்றும் பவுண்ராஜ் சுலக்சன் ஆகியோரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்