ஜவாதின் நிதியொதுக்கீட்டில் கல்முனை மாரியார் வீதி நான்காம் குறுக்குத்தெரு அபிவிருத்தி..!

அதிசய உலகம்

next........

மேலும்..
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.எம்.ஏ.ரஸ்ஸாக் ஜவாத் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு- செலவுத் திட்டத்தின் ஐந்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கல்முனை மாரியார் வீதி நான்காம் குறுக்குத்தெரு கொங்க்ரீட் பாதையாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
கல்முனை-03 ஆம் பிரிவு கிராம அபிவிருத்தி சங்கம், இவ்வீதி அபிவிருத்தி திட்டத்தை பொறுப்பேற்று மக்கள் பங்களிப்புடன் மிகச் சிறப்பாக பூர்த்தி செய்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை மேற்படி கிராம அபிவிருத்தி சங்கத்தின்  தலைவர் எம்.எம்.ஜமால்தீன் தலைமையில் இவ்வீதி மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டதாக சங்கத்தின் செயலாளர் ஈ.எம்.சமீன் தெரிவித்தார்.
இவ்வீதி மிக நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல், குன்றும் குழியுமாக காணப்பட்டதனால் மழை காலங்களில் இவ்வீதியினால் பாதசாரிகளோ வாகனங்களோ பயணிக்க முடியாதளவுக்கு மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்விடயத்தை கல்முனை-03 ஆம் பிரிவு கிராம அபிவிருத்தி சங்கம் கிழக்கு மாகாண சபை கழிவதற்கு முன்னர் அந்த சபையின் உறுப்பினராக கே.எம்.ஏ.ரஸ்ஸாக் ஜவாத் பதவி வகித்தபோது தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு- செலவுத் திட்டத்தின் மூலம் இவ்வீதி அபிவிருத்திக்காக ஐந்து இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருந்தார்.
இதற்காக இப்பிரதேச பொது மக்களின் சார்பில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.எம்.ஏ.ரஸ்ஸாக் ஜவாத் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதாக சங்கத்தின் செயலாளர் ஈ.எம்.சமீன் மேலும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்