மூளையின் செயற்பாடுகளை கண்காணிக்க புதிய கருவி!

அதிசய உலகம்

OMG!!

மேலும்..

மனித மூளையின் செயற்பாடுகளை பதிவு செய்யும்  புதிய கருவி ஒன்றை ஐக்கிய இராச்சியத்திலுள்ள விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

Neuropixels எனும் குறித்த சாதனம் மூளையின் உள்ளக செயற்பாடுகள் தொடர்பில் நுணுக்கமான தகவல்களை பதிவு செய்கின்றது.

இதன் மூலம் இதுவரை விடை காண முடியாத நோய்களுள் ஒன்றான அல்ஸைமர் நோய் தொடர்பிலும் புதிய தகவல்கள் பலவற்றினை பெற முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்னர்.

இதுவரை காலமும் மூளை நரம்புத் தொகுதியின் ஒரு பகுதியில் உள்ள தொழிற்பாடுகள் அல்லது தொழிற்பாடுகளின் வடிவங்களை தனித்தனியாக மட்டுமே ஆய்வு செய்ய முடிந்தது.

ஆனால் இப் புதிய கருவியின் ஊடாக இவ்விரு செயற்பாடுகளையும் ஒரே தடவையில் செய்துகொள்ள முடியும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்