தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தற்கொலைகளைத் தடுக்கும் முயற்சியில் முகநூல் !

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தற்கொலைகளை தடுக்க முகநூல் வலைத்தளமானது, புதிய அம்சத்தை வழங்க முடிவு செய்துள்ளது.

இதன்மூலம்  முகநூல்  நேரலை வீடியோ அல்லது பதிவுகளில் தற்கொலை சார்ந்த தகவல்களை பகிர்ந்து கொள்பவரை முகநூல் கண்டறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூல் பதிவு அல்லது  நேரலை வீடியோ உள்ளிட்டவற்றில் தற்கொலை சார்ந்த கருத்துக்களை ஒருவர்  பயன்படுத்தும் போது பேடெர்ன் அங்கீகாரம்  (pattern recognition) எனும் வழிமுறையை  பயன்படுத்தி முகநூலானது, கண்டறியும்.

இந்த அம்சம் ஐரோப்பிய  யூனியன் தவிர உலகின் மற்ற பகுதிகளில் வழங்கப்படுகிறது.

முகநூல் சேவையை பாதுகாப்பான சமூகமாக உருவாக்கும்  பணிகளின் ஒரு அங்கமாக  பேஸ்புக் நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்களில் யாரேனும் மன சோர்வில் இருக்கும் போது அவருக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குபவருடன்  இணைக்க
முகநூல்  உதவி செய்து வருகிறது என முகநூலின்   தயாரிப்பு மேலாண்மை பிரிவு துணை தலைவர் கை ரோசென் தெரிவித்துள்ளார்.

முகநூலின் புரோஆக்டிவ் டிடெக்ஷன் (   ) அம்சத்தின் அங்கமாக உடனடி பதில்  அளித்தவர்களுடன் இணைந்து முகநூல் பணியாற்றியுள்ளது.

அதன்படி முகநூல் பதிவுகளில் உதவி கோரும், அல்லது  பிரச்சனைகளை குறிக்கும் சில வார்த்தைகளை கொண்டவை என கண்டறியப்படுகிறது.

இந்த அம்சத்தின் கீழ் சில இடங்களில் யாரும் அறியாத சில வீடியோக்களையும் தொழில்நுட்ப உதவியுடன் முகநூல்  கண்டறிந்துள்ளது என   ரோசென் தெரிவித்துள்ளார்.

தற்கொலை தடுப்பு மற்றும் சுய தீங்கு விளைவிப்பவர்களுக்கு வழிகாட்டுவதில்  அனுபவம் மிக்க  குழுவினர் முகநூலில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்