மன்னார் ஆண்டாங்குளம் கிராமத்தில் காணாமல் போன குடும்பஸ்தர் மடு 3 ஆம் கட்டை காட்டு பகுதியில் சடலமாக மீட்பு-(படம்)

அதிசய உலகம்

next........

மேலும்..
-மன்னார் நிருபர்-
(02-12-2017)
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போய் சுமார் 37 நாட்களை கடந்த நிலையில் நேற்று(01) வெள்ளிக்கிழமை மாலை மடு   காட்டுப்பகுதியில் உருக்குழைந்த நிலையில் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
-சடலமாக மீட்கப்பட்டவர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆண்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சன் நீக்கிலாஸ் (வயது-56) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆண்டாங்குளம் சந்தியில் முடி திருத்தகத்தை (சலூன்) நடத்தி வரும் குறித்த குடும்பஸ்தர் கடந்த 25-10-2017 அன்று மாலை 4 மணியளவில் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் அடம்பன் பொலிஸார் மற்றும் உறவினர்கள் குறித்த குடும்பஸ்தரை நீண்ட நாட்கள் தேடியும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.
-இந்த நிலையில் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி , மடு பூ மலந்தான் கிராம அலுவலகர் பிரிவுக்குற்பட்ட மடு 3 ஆம் கட்டை காட்டுப்பகுதியில் மிகவும் உருக்குழைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக மடு பொலிஸாருக்கு நேற்று வெள்ளிக்கிழமை(1) மாலை தகவல் கிடைத்த நிலையில் மடு பொலிஸார் சடலத்தை சென்று பார்வையிட்டனர்.
-இந்த நிலையில் குறித்த சடலத்தை பார்வையிட்ட காணாமல் போன     குடும்பஸ்தரின் உறவினர்கள் , சடலத்தை பார்வையிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் காணாமல் போன ஆண்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சன் நீக்கிலாஸ் (வயது-56) என்பதனை உறுதி படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் மடு பொலிஸார் , கிராம அலுவலகர் மற்றும் விசேட தடவியில் நிபுனத்துவ பொலிஸார் ஆகியோர் சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்டதோடு,மேலதிக விசாரனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்