அரசினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை; வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்!

அதிசய உலகம்

next........

மேலும்..

அரசினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை: வவுனியா மாவட்ட பேருந்து நிலையத்தின் முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்!

அரசினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமையினால் வடக்குமாகாண வேலையில்லா பட்டதாரிகளால் இன்று(02) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தின் போது சந்திரிக்கா ஆட்சியில் 65 ஆயிரம் மகிந்த ஆட்சியில் 20 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் ஆனால் நல்லாட்சியில்…?, நியமனம் வழங்குவதை துரிதப்படுத்து, அரசே வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எங்கே, எதிர்கட்சித் தலைவரே தூங்காதே, போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு இப்போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கு மகாண வேலையில்லா பட்டதாரிகளால் துண்டுப்பிரசுரங்களும் விநோயகிக்கப்பட்டன. தொடர்ந்தும் இப்போராட்டத்தின் பின்னரும் தமக்கான நியாயமான தீர்வு வழங்கப்படாதவிடத்து தொடர் போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக வேலையில்லா பட்டதாரிகள் மேலும் தெரிவித்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்