கைது செய்யப்பட்ட இரண்டு கிராம உத்தியோகத்தர்கள்

அதிசய உலகம்

next........

மேலும்..

யானையின் தந்தங்களை கொண்டு தங்க மாலையில் பாகங்களை அமைத்த இரு கிராம உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள், பொல்பிலிதிகம பிரதேசத்தில் வைத்து இன்றைய நேற்றைய  (02) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

32 வயது மற்றும் 42 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒருவர் மகுல்பொன கிராம உத்தியோகஸ்தராக கடமையாற்றிவருவதுடன், மற்றைய நபர் தொரவேருவ கிராம உத்தியோகஸ்தராக சேவையாற்றி வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, தங்க மாலையில் தந்தத்தின் மூலம் பாகங்களை செய்துள்ளதாகவும், சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்