அரச ஊழியர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி மன்னாரில்

அதிசய உலகம்

next........

மேலும்..

மன்னார் மாவட்டத்திலுள்ள அனைத்து அரச ஊழியர்களும் எதிர் காலத்தில் இங்குள்ள சமூகத்துக்கு சிறந்த அனைத்து சேவைகளையும் செய்யக்கூடிய நல்ல உத்தியோகத்தர் ஊழியர்களாக திகழ வேண்டும் என்ற நோக்குடன் வெளிக்கள செயல்முறை பயிற்சிகள் வழங்குவதற்கான நடவடிக்கையை மன்னார் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான எம்.வை.எஸ்.தேசப்பிரிய மேற்கொண்டுள்ளார்.

இவ் செயல்முறைப் பயிற்ச்சிகளை வழங்குவதற்காக மன்னார் மாவட்டத்திலே குருவில வான் காட்டுப் பகுதியை தெரிவு செய்தே இவ் பயிற்சிகள் கடந்த வாரம் இரண்டு நாட்கள் நடைபெற்றன
இதன் பிரதான வளவாளராக ரி.என்.நியூட்டன், உபாலி பண்டார, இந்திரி, இணை வளவாளர்களாக நவயுகா, றஞ்சினி ஆகியோர்களைக் கொண்டு மன்னார் மாவட்டத்திலுள்ள அரச திணைக்களத்தைச் சார்ந்தவர்களுக்கு வெளிக்கள செயல்முறைப் பயிற்சி முகாமில் கலந்துதுகொண்டனர்.

இந்த பயிற்சி முகாமில் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வரும் விடயங்கள் அரச ஊழியர்களின் தலைமைத்துவப் பயிற்சி, முகாமைத்துவம், உட்கட்டமைப்பு, நம்பிக்கையை கட்டியெழுப்புவது, தன் நம்பிக்கை, தொடர்பாடல் திறன்கள், அவதானிப்புத் திறன்கள், திட்டமிடல், கண்காணிப்பு ஆகிய இவற்றினூடாக அரசாங்கத்தினுடைய ஊழியர்கள் எதிர் காலத்தில் சமூக மட்டத்துக்குச் சென்று செயல்படுத்தக்கூடிய விதமாக குறிப்பாக மேற்கூறிய செயல்பாட்டில் திறம்பட செயல்பட வேண்டும் என்று சக்தி மயப்படுத்தும் நோக்குடனே இவ் பயிற்சி முகாம் நடாத்தப்பட்டன.

இவ்வாறான முகாம் முதலில் மன்னார் மாவட்ட அரச ஊழியர்கள் ஒரு சிலருக்கு தம்புள்ளவில் நடாத்தப்பட்டபோது இதன் மூலம் கிடைக்கப்பெற்ற அனுபவங்களைக் கொண்டே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் இவ் செயல் திட்டம் மன்னார் மாவட்டத்திலுள்ள சகல அரச ஊழியர்களும் பெற வேண்டும் என்ற தூர நோக்குடன் செயல்பட ஆரம்பித்துள்ளார்.

இவ் திட்டத்தை வெளி மாவட்டங்களுக்கு இங்குள்ள அரச ஊழியர்களை அனுப்பி செயல்படுத்த அதிக செலவாகும் என்ற கருதியமையால் மன்னார் மாவட்டத்திலே இதற்கென வள நிலையம் ஒன்றை உருவாக்கி இங்குள்ள அனைத்து அரச ஊழியர்களுக்கும் விணைத் திறனைக் கொண்ட பயிற்சியை வழங்குவதற்கே பரீட்சாத்திரமாக கடந்த வாரம் ஆரம்பித்து முதல் குழுவுக்கு வழங்கப்பட்ட பயிற்சியின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த 26 ந் திகதி தொடக்கம் 28 ந் திகதி வரை நடாத்தப்பட்டு செவ்வாய் கிழமை (28.11.2017) இரண்டாவது குழுவுக்கு பயிற்சி நிறைவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து மூன்றாவது குழு பயிற்சிக்கு அன்று பின்னேரம் வந்து சேர்ந்தது. இவ் பயிற்சி தொடர்ந்து ஒவ்வொரு குழுவுக்கும் தலா மூன்று தினங்கள் முப்பது நபர்கள் கொண்டவர்களாக இவ் பயிற்சி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அடம்பன் குருவில வான் பகுதியிலேயே சுமார் ஐந்து ஏக்கர் காட்டுப் பகுதியில் இந்த வள நிலையம் குறுகிய காலத்தில் அமைக்கப்பட்டு மன்னார் அரச அதிபர் தலைமை கொண்டு மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் மற்றும் அவரின் ஊழியர்களின் உதவிகளுடன் இவ் பயிற்சிகளுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இவ் பயிற்சியின் பிரதான வளவாளராக இருக்கும் இருவரும் சர்வதேச மட்டத்தில் பயிற்சி பெற்று சான்றிதழ்கள் பெற்றவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்