2017 ஆம் ஆண்டின் “அறபாவின் ஆளுமைகள்” பரிசளிப்பு விழா எதிர்வரும் 05 ஆம் திகதி…

அதிசய உலகம்

next........

மேலும்..

பைஷல் இஸ்மாயில் –

அம்பாறை, அட்டாளைச்சேனை அறபா வித்தியாலத்தின் 2017 ஆம் ஆண்டின் “அறபாவின் ஆளுமைகள்” பரிசளிப்பு விழா பாடசாலை அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.15 மணியளவில் அறபா வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஏ.அன்சார் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2017 இன் அதிதிகளாகும் “அறபாவின் ஆளுமைகள்” விருதினை இலங்கை நிருவாக சேவையில் (SLAS) கடமையாற்றுகின்ற சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனிபா, ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விஷேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில் மற்றும் இலங்கை திட்டமிடல் சேவை (SLPS) அம்பாறை கச்சேரியில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றுகின்ற ஐ.எல்.தௌபீக் ஆகியோர்களுக்கு இந்த விருதுகள் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

இவ்வாண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீசையில் 135 இக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த 14 மாணவர்களும், 2 ஆம் தவணையில் முதல் நிலை பெற்ற 15 மாணவர்களும், பாடசாலைக்கு 100 வீதமான வரவாக வருகை தந்த 11 மாணவர்களும், சிறந்த மாணவத் தலைவர்கள் 03 பேரும், சுயமாக முன்வந்து பாடசாலைக்கு உதவிய 02 மாணவர்களும், பாடசாலை சுற்றுச் சூழலுக்காக உதவிய 03 மாணவர்களும், பாடசாலைச் சொத்துக்களைப் பேணிப் பாதுகாத்த 01 மாணவனும், இவ்வாண்டுக்கான சிறந்த மாணவர் விருதினை 01 மாணவனும் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

அத்துடன், அதிபர் விருதினை 02 மாணவர்களும்,  பாடசாலைக்கு வழமையாக 6.30 மணிக்கு முன்னர் வருகை தரும் மாணவ விருதினை தரம் 2 இல் கல்வி கற்கும் 02 மாணவர்களும், மிகச் சிறப்பான முறையில் கடமையாற்றிய மாணவ தலைவருக்கான விருதினை 01 மாணவனும் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

மேலும், தரம் 5 மற்றும் க.பொ.தர சாதாரண தரத்தில் விஷேட கவனம் செலுத்திய ஆசிரியர்கள், சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள துணை நின்ற ஆசிரியர்கள், வலய மட்ட மதீப்பீட்டில் வெளிவாரியாக அதிக மதிப்புப் பெற்ற ஆசிரியர்கள், இவ்வாண்டில் மிகக் குறைந்த விடுமுறையைப் பெற்ற ஆசிரியர், கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு மேலதிகமாக விஷேட செயற்திட்டங்களை பூர்த்தி செய்த ஆசிரியர், சமூகத்திலிருந்து பாடசாலைக்கு உதவியவர்களுக்கான பல விருதுகள் இவ்விழாவின்போது வழங்கி வைக்கப்படவுள்ளன.

இதன்போது, முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரின் 3 இலட்சம் ரூபா நிதியின் கீழ் பாடசாலைக்கான தளபாடங்களுடன், மாணவ பாராளுமன்ற மாணவர்களுக்கான சீருடைகளும் வழங்கி வைக்கப்பட்வுள்ளன. அத்துடன் முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சராக இருந்த எம்.எஸ்.உதுமாலெப்பையின் நிதியொதுக்கீட்டின் கீழ் 175 மாணவர்களுக்கு பாடசாலை பாதணிகளும் வழங்கி வைக்கப்படவுள்ளன.

இந்த பரிசளிப்பு விழாவுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர்களான ஏ.எல்.முஹம்மட் நஸீர், எம்.எஸ்உதுமாலெப்பை ஆகியோர் பிரதம அதிதிகளாகவும், கௌரவ அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ரஹ்மத்துல்லாஹ், விஷேட அதிதியாக அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.கஸ்ஸாலி ஆகியோர்கள் உள்ளிட்ட பல அதிதிகள் கலந்து சிறப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த வருடம் நடைபெற்ற “அறபாவின் ஆளுமைகள்” விழாவில் இலங்கை கல்வி நிருவாக சேவையிலிருந்து ஓய்பெற்ற 03 பேருக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதும், இந்த விருதுகள் யாவும் குறித்த பாடசாலையில் கல்வி கற்றவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்