சாவகச்சேரியில் ஊடகவியலாளர் ஒருவர்மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

அதிசய உலகம்

next........

மேலும்..

சாவகச்சேரி நகர்ப் பகுதியில், முச்சக்கரவண்டியில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ஊடகவியளாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டுத் தப்பியுள்ளனர்.

இச் சம்பவம் நேற்று மாலை 06.25 அளவில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய ஒலிபரப்பாகச் செயற்படும் யாழ்FM இல் கடமையாற்றும் ஊடகவியளாளர் ஒருவர் சாவகச்சேரியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு வரும்போது அவருடைய வாகனத்தை மறித்து குறித்த நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அத் தருணத்தில், பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்த இருவர், குறித்த ஊடகவியாளரை பாதுகாக்க முற்பட்ட போது அவர்கள்மீதும் குறித்த மர்ம நபர்கள் மதுப் போத்தல்களால் தாக்கியுள்ளனர்.

முச்சக்கரவண்டியில் வந்த நபர்கள் அரசியல் ஆதிக்கம் உள்ள நபர் ஒருவரின் பெயரை அத்தருணத்தில் பயன்படுத்தி, பின்னர் அங்கிருந்து அதே முச்சக்கரவண்டியில் தப்பியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்