அமெரிக்காவில் அணு ஆயுதத் தாக்குதலுக்கு முன்எச்சரிக்கை ஒலிப் பரிசோதனை

அதிசய உலகம்

next........

மேலும்..

அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் அணு ஆயுதத் தாக்குதல் முன்எச்சரிக்கை ஒலிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரஷ்யாவுடனான பனிப்போர் சூழ்நிலைகளுக்கு பின்னர் முதல்முறையாக இவ்வாறான சோதனை நடத்தப்பட்டுள்ளது.

வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை மற்றும் அணுப் பரிசோதனையை மேற்கொண்டுவரும் நிலையில் மாதாந்தம் நடத்தப்படும் இந்த பரிசோதனை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைப் பரிசோதனைகளை மேற்கொண்டுவரும் அதேவேளை கடந்த செப்டெம்பர் மாதம் ஆறாவது அணு ஆயுதச் சோதனையை நடத்தியிருந்தது.

பசுபிக் பிராந்தியத்திலுள்ள ஹவாய் தீவுகளில் ஏற்கனவே சுனாமி உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களுக்கான ஒலிச் சோதனைகள் மாதாந்தம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்