மாட்டிறைச்சி தொடர்பான அறிவிப்பாணையை திரும்பப்பெற்றது மத்திய அரசு.!

அதிசய உலகம்

next........

மேலும்..

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பது தடை செய்யப்படுவதாக மத்திய அரசு மே 26 ஆம் தேதி மாட்டிறைச்சி தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

“நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வது உடனடியாக தடை செய்யப்படுகிறது என்றும், சந்தைகளில் விவசாய தேவைகளுக்காக மட்டுமே மாடுகளை விற்பனை செய்யவோ, வாங்கவோ முடியும்” என அந்த அறிவிப்பாணையில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

மத்திய அரசின் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கிற அறிவிப்பானது நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிர்ப்பலைகளை கிளப்பியது. கேரளா, மேற்கு வங்கம், கர்நாடகம் உள்ளிட்ட மாநில அரசுகள் பாஜகவின் மேற்கண்ட அறிவிப்பினை மூர்க்கமாக எதிர்த்தன.

இந்நிலையில், இறைச்சிக்காக மாடுகளை விற்கக்கூடாது என்ற அறிவிப்பாணையை மத்திய அரசு திரும்பப்பெற்றது.

அறிவிப்பாணையில் மாற்றம் செய்யப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறிய நிலையில் மாட்டிறைச்சி தொடர்பான அறிவிப்பாணை திரும்பப்பெற்றுள்ளது மத்திய அரசு.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்