கண்ணுக்குள் பச்சை குத்திய அழகி: பார்வை பறிபோகும் அபாயம்

அதிசய உலகம்

So funny!!

மேலும்..

கண்ணுக்குள் பச்சை குத்தியதால், கனடாவை சேர்ந்த மாடல் அழகியின் பார்வை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கனடாவை சேர்ந்த மாடல் அழகி கேட் கேளிங்கர். இவர் தனது உடல் அமைப்பை மாற்றி அமைப்பதில் ஆர்வம் உடையவர்.

உடலின் பல உறுப்புகளில் மாற்றம் செய்து தனது புகைப்படத்தை ‘பேஸ்புக்’ இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் தனது கண்ணில் விழி வெண்படலத்தின் நிறத்தை மாற்றி புதுமை படைக்க விரும்பினார்.

அதற்காக கண் மருத்துவரிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கண்ணுக்குள் விரும்பிய நிறத்தை பச்சை குத்தலாம் என பரிந்துரை செய்தார்.

அதை தொடர்ந்து அவர் கருஞ்சிவப்பு (‘பர்பிள்’) நிறத்தில் மையை தேர்வு செய்து பச்சை குத்துவது போன்று ஊசி மூலம் கண் விழி வெண் படலத்தில் செலுத்தினார். அதை தொடர்ந்து விழி வெண் படலம் கருஞ்சிவப்பு நிறத்தில் மாறியுள்ளது.

அத்துடன் கண்ணுக்குள்ளேயும், இமைப்பகுதியும் வீங்கி, வேதனை அதிகரித்துள்ளது.

அதையடுத்து அவர் மருத்துவரிடம் சென்று பரிசோதித்தார். அவர் சில கண் மருந்துகளை சிபாரிசு செய்துள்ளார்.

அதை பயன்படுத்தியும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. தொடர்ந்து வேதனைப்பட்டு வந்த அவரின் கண் பார்வை தற்போது சிறிது சிறிதாக மங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே நிலை தொடர்ந்தால் கண் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது. இதற்கிடையே, தனது போட்டோவை பேஸ்புக்கில் பதிவிட்டு கேட் கேளிங்கர் தனது நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அத்துடன் கண்ணுக்குள் பச்சை குத்தியதால் தான் படும் கஷ்டங்களையும், பார்வை பறி போகும் அபாயம் இருப்பதையும் வெளியிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்