மாத்தறையில் மின்னல் தாக்கி மீனவர் பலி

அதிசய உலகம்

next........

மேலும்..

மாத்தறை தெவிநுவர பகுதியில் மின்னல் தாக்கி மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருந்தது.

எனினும் குறித்த மீனவர் நேற்றைய தினம் தெவிநுவர மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற நிலையிலேயே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

அத்துடன் குறித்த மீனவரும் மற்றுமொரு மீனவரும் படகில் சென்ற நிலையில் அவருக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லையென குறிப்பிடப்படுகிறது.

இதற்கமைய மாத்தறை தெவிநுவர பகுதியை சேர்ந்த 68 வயதுடைய மீனவர் ஒருவரே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மீனவரின் சடலம் மாத்தறை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் மாத்தறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்