பதுளை மாவட்டத்திற்கு தொடர்ந்தும் சிவப்பு எச்­ச­ரிக்கை !

அதிசய உலகம்

next........

மேலும்..

பதுளை மாவட்டத்தில்  அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தால் விடுக்­கப்­பட்­டுள்ள சிவப்பு எச்­ச­ரிக்கை தொடர்ந்தும் நீடிக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பதுளை மாவட்டத்தின்,  பசறை மற்றும் ஹல்­துமுல்லை பிர­தே­சங்­க­ளில் வாழும்  58 குடும்­பங்­களின்  குடி­யி­ருப்­புகளுக்கு அனர்த்த எச்­ச­ரிக்­கை விடுக்கப்பட்டுள்ளன.

அதி­க­ளவு மழை தொட­ர்ந்தும்  பெய்து ஏதேனும் அனர்த்த நிலை ஏற்படுமாயின், இம் ­மக்­கள் பாது­காப்­பான இடங்­களை நோக்கி வெளி­யே­று­மாறும் கோரப்­பட்­டுள்­ளனர்.

மண்­ச­ரிவு மற்றும் கற்­பா­றைகள் வீதியில் விழும்  அபாயம் கார­ண­மாக பது­ளை-­கொ­ழும்பு பிர­தான வீதியை பயன்­ப­டுத்தும் வாகன சார­திகள் ஹல்­து­முல்லை, பெரகல மற்றும் ஹப்­புத்­தளை தொடக்கம் பண்­டா­ர­வளைவரையில் மிகுந்த அவதானமாக வாகனத்தை செலுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்