இவ்வாண்டின் அபிவிருத்தி வேலைகளை இவ்வாண்டுக்குள்ளேயே முடிவுருத்த உத்தரவு – பிர்னாஸ் இஸ்மாயில் பணிப்புரை

அதிசய உலகம்

next........

மேலும்..

பைஷல் இஸ்மாயில், ஏ.ஜீ.முஹம்மட் இர்பான் –

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் 60 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சகல வேலைத்திட்டங்களையும் இவ்வாண்டு இறுதிக்குள் முடிவுருத்தப்பட வேண்டும் என்று ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விஷேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில் சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரருக்கும், அது தொடர்பான அதிகாரிகளுக்கும் பணிப்புரையினை நேற்று (04) விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏறாவூர் 04 மற்றும் எல்லை நகர் கிராமங்களை ஊடருத்துச் செல்கின்ற கருமாரியம்மன் கொங்கிரீட் வடிகான் அமைத்தல் வேலைத்திட்டங்கள் யாவும் 2017 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கமைவாக ஒதுக்கப்பட்ட நிதியாகும். இந்த நிதிக்கான சகல வேலைத் திட்டங்களும் இவ்வாண்டுக்குள்ளேயே முடிவுருத்தப்படல் வேண்டும் என்றார்.

தற்போது 40 சத வீதமான வேலைகள் முடிவுருத்தப்பட்டுள்ளதால் மீதமான வேலைகளை 2018 ஆம் ஆண்டு ஆரம்ப காலப் பகுதிக்குள் முடிக்கவேண்டும் என்ற உத்தரவினையும் இதன்போது விடுத்தார்.

மேலும் இவ்வாண்டுக்குறிய மீதமான வேலைகளை 2018 ஆம் ஆண்டு வேலைத்திட்டங்களில் உள்வாங்கி அதனை மிக விரைவாக முடிப்பதற்கு சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறும், இவ்வடிகானில் நீர் வடிந்தோடுவதற்கு இடையூராக இருக்கின்ற முட்கம்பி இடப்பட்டுள்ள வேலியை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களை கேட்டுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்