பாம்புகள் கரையொதுங்கியமைக்கு கடல் நீரிலுள்ள வெப்பத்தன்மையே காரணம் !

அதிசய உலகம்

next........

மேலும்..

மட்டக்களப்பு  மாவட்டத்தின், நாவலடியில்  கடந்த சனிக்கிழமை (02.11.2017) காலை, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அனைத்து மீனவர்களின் வலைகளிலும் பாம்புகள்  பிடிபட்டதால், அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவியது.

இவ்வாறு,  மட்டக்களப்பு கரையோரத்தில் பெரும் அளவு பாம்புகள் கரையொதிங்கியமைக்கான காரணம் கடல் நீரில் உள்ள வெப்பத்தன்மையே காரணம் என்று நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இது குறித்து தற்போது விசேட ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நாரா நிறுவனம் மேலும் தெரிவித்தது.

கடந்த சுனாமி பேரலை ஏற்பட்ட காலத்திலும் பெருமளவான பாம்புகள் மட்டக்களப்பு பகுதியில் படையெடுத்ததால், தற்போது இவ்வாறான அச்சம் மக்கள் மத்தியில்  ஏற்பட்டது.

இந்நிலையில்,  இது தொடர்பாக பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நாரா நிறுவனத்திற்கு கடற்தொழில் அமைச்சு நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்