முள்ளிவளை கிச்சிராபுரத்தில் தனியார் ஒருவரின் நிதி உதவியில் வீட்டுத்திட்டம்!

அதிசய உலகம்

next........

மேலும்..

முள்ளியவளை கிச்சிராபுரத்தில் ஜக்கிய அரபு இராச்சியத்தின் தனவந்தர் ஒருவரின் நிதி உதவியில் வீட்டுத்திட்டம் அமைத்துக்கொடுக்கப்படுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(05) இடம்பெற்றுள்ளது.

வடக்கில் உள்நாட்டு போர் காரணமாக இடம்பெயர்ந்து 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் மீள்குடியேற்றப்பட்டு இதுவரை அரசாங்கத்தால் வீடுகள் கொடுக்கப்படாத 120 தமிழ் முஸ்லீம் மக்களுக்கு; ஜக்கிய அரப இராச்சியத்தின் தனவந்தர் ஒருவரின் நிதி உதவியில் 600 சதுர அடிகளை கொண்ட வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளது.

இந்த வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(05) காலை கிச்சிராபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதில் அமைச்சர் றிச்சாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியூதீன், வடமாகாணசபை உறுப்பினர் வை.ஜெனோபர் இந்த வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொடுக்கும் இணைப்பாளர் முகமட்றவ, அமைச்சரின் இணைப்பு செயலாளர் எம்.எச்.முஜாகீர், ஆகியோர்  கலந்துகொண்டு பயனாளிகளுக்கான வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல்லினை நாட்டி வைத்துள்ளார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்