போரினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு

அதிசய உலகம்

next........

மேலும்..

(டினேஸ்)

ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த போரினால் பாதிக்கப்பட்ட  பாடசாலைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 04 திகதி வாகரை பிரதேச கல்வி வலயத்திற்குட்பட்ட பால்ச்சேனை மகா வித்தியாலயம் மற்றும் மாங்கேணி கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை ஆகிய இரு பாடசாலைகளில் நடைபெற்றது.

இந்நிகழ்வானது உலக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைந்த செயற்பாட்டில் நடைபெற்றதுடன் இதன் போது ஜேர்மன் உதயம் தொண்டு நிறுவனத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் எம்.ஜெகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.டிலான் மற்றும் உலக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் வாகரை பிரதேச உருப்பினர் எஸ்.லக்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த மும்பது வருட கால யுத்தத்தின் போது பெரிதும் பாதிக்கப்பட்ட பாடசாலைகளில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஜேர்மன் வாழ் புலம்பெயர் உதயம் அமைப்பின் உதவியின் பேரில் 260 பாடசாலை புத்தகப்பைகள் மற்றும் கொம்பாஸ் பெட்டிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இத்தொண்டர் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக பயன் பெற்ற மாணவர்கள்  ஜேர்மன் வாழ் உதயம் நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் இதனைப் போன்று இன்னும் பல நூற்றுக்கணக்கான வறுமைக் கோட்டின் கீழ் கல்விகற்கின்ற மாணவர்களை தெரிவு செய்து அவர்களுக்கும் இவ்வாறான உதவிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்