அனர்த்தங்களிற்கு முகம் கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல்.

அதிசய உலகம்

next........

மேலும்..

அனர்த்தங்களிற்கு முகம் கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று கிளிநொச்சயில் இடம்பெற்றது.

அனர்த்தங்களிற்கு முகம் கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று கிளிநொச்சயில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் குறித்த விசேட கலந்துரையாடல் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், இடர் முகாமைத்துவ அதிகாரிகள், முப்படையினர், பொலிசார், திணைக்கள சார் அதிகாரிகள், தொண்டு நிறுவன பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது அனர்த்தம் ஒன்று ஏற்படும் பட்சத்தில் மேற்கொள்ளக்கூடிய வியங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், முன் ஏற்பாடுகள் தொடர்பிலும் திட்டமிடப்பட்டது,
இவ்விடயம் தொடர்பில் அரசாங்க அதிபர் ஊடகங்களிற்கு கரு்தது தெரிவிக்கையில்,
அனர்த்த முன் ஏற்பாடுகள் தொடர்பில் இன்றய விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக குறிப்பிட்டார். அனர்த்த்தினை எதிர்கொள்வதற்கு ஏற்ப திட்ட்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இன்று முதல் மாவட்ட செயலகத்தில் 24 மணி நேரமும் இடர் முகாமைத்துவ நிலையம் செயற்பட உள்ளதாகவும், மக்கள் எந்த நேரத்திலும் தொடர்பினை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் இதன்புாது குறிப்பிட்டார்.
தொடர்பு இலக்கங்கள் – 0212285330, 0772320528, 0212283965

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்