மஹிந்த – தொண்டமான் தொலைபேசியில் பேச்சு!

அதிசய உலகம்

next........

மேலும்..
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்துவரும் சூழ்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் எம்.பியுமான ஆறுமுகன் தொண்டமான் முக்கிய பேச்சுகளை நடத்தியுள்ளார்.
தொலைபேசியூடாக இந்தப் பேச்சு நடந்துள்ளது. தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் தேர்தல் கூட்டு என்பன உட்பட்ட பல விடயங்கள் குறித்து இந்த உரையாடலின்போது  விவாதிக்கப்பட்டிருக்கிறது.
ஜனாதிபதி மைத்திரி அணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடப்போவதாக ஆறுமுகன் எம்.பி. இதன்போது தெரிவித்ததாகவும், ஆனால், சில இடங்களில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தாமரை மொட்டு அணியுடனும் போட்டியிட விருப்பு கொண்டிருப்பதாக வெளிப்படுத்தினாரென்றும் மஹிந்த அணி வட்டாரங்கள் தெரிவித்தன.
எப்படியாயினும் தொண்டாவை தமது அணியில் இணைத்துக்கொள்ள விருப்பு கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தனது தம்பியார் பஸில் ராஜபக்ஷவை கேட்டிருப்பதாகவும் அறியமுடிந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்