அவசரமாக கூடுகிறது அமைச்சரவை!

அதிசய உலகம்

next........

மேலும்..
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்குக் கையளிப்பது தொடர்பில் எதிர்வரும் 7ஆம் திகதி அவசர அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. அத்துடன், இது தொடர்பில்  8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை கையளிப்பது தொடர்பில் மூலோபாய அபிவிருத்தி சட்டமூலத்தின் ஒழுங்குவிதிகளுக்கமைய சம்பந்தப்பட்ட கோரிக்கையை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவேண்டியுள்ளது.
எனவே, எதிர்வரும் 7ஆம் திகதி அவசர அமைச்சரவைக் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்து அமைச்சரவை அனுமதியைப் பெற்று அதன் பின்னர் 7ஆம் திகதியே சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் எனத் தெரியவருகின்றது.
இந்த விடயம் தொடர்பில் விவாதமொன்று அவசியமெனில் எதிர்வரும் 8ஆம் திகதி மாலை 7.30 மணி தொடக்கம் 9.30 மணிவரை அந்த விவாதத்தை நடத்துவதற்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்