தமிழரசுக் கட்சி தலைமையிலான கூட்டில் இருந்து ரெலோ வெளியேற்றம்! வவுனியா கூட்டத்தில் முடிவு

அதிசய உலகம்

next........

மேலும்..

தமிழரசுக் கட்சி தலைமையிலான கூட்டில் இருந்து ரெலோ வெளியேற்றம்! வவுனியா கூட்டத்தில் முடிவு

தமிழரசுக் கட்சி தலைமையிலாக கூட்டில் இருந்து தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) வெளியேறுவதாக தெரிவித்துள்ளது.

வவுனியாவில் அமைந்துள்ள ரெலோ அமைப்பின் அலுவலகத்தில் இரவு 9 மணிதொடக்கம் அதிகாலை 1.30 வரை அவ் அமைப்பின் அரசியல் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்திலேயே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் ரெலோ அமைப்பின் அரசியல் குழுத் உறுப்பினரம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வினோரதராதலிங்கம் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,

தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இடப்பங்கீடுகள் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் ரெலோ தனது அதிருப்தி நிலையை வெளிப்படுத்தியது. தமிழரசுக் கட்சியின் செயற்பாடு அதில் இணைந்து நாம் செயற்பட முடியாத சூழலை உருவாக்கியுள்ளது. அதனால் எதிர்வரும் தேர்தலில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இன்று யாழ்ப்பாணத்தில் நாம் தொடர்ந்து இது தொடர்பில் பேசவுள்ளோம். அதன் பின்னரே எவ்வாறு போட்டியிடுவது என்ற முடிவு எட்டப்படும். இன்றைய தினம் தமிழரசுக் கட்சிக்கு எமது முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.                                               

வவுனியா செய்தியாளர்  T .sivakumar

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்