உதயநிதியின் அடுத்த படம் தயார்!

அதிசய உலகம்

next........

மேலும்..

பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ‘நிமிர்’ படத்தினைத் தொடர்ந்து, தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை உதயநிதி வெளியிட்டுள்ளார்.

உதயநிதி தனது அடுத்த படத்தில் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 19-ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதுடன், படம் குறித்த ஏனைய தகவல்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன.

இதேவேளை, மூன்சாட் எண்டர்டெயின்மன்ட் சார்பில் சந்தோஷ் டி.குருவில்லா தயாரித்துள்ள ‘இப்படை வெல்லும்’ படத்தில் உதயநிதி ஜோடியாக நமீதா பிரமோத், பார்வதி நாயர் நடிக்கின்றனர்.

சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் மகேந்திரன், சண்முகராஜ் உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்