fbயில் சந்திரபாபு…

அதிசய உலகம்

next........

மேலும்..

புத்தியுள்ள மனிதரெல்லாம்
போஸ்ற் போடுவதில்லை
போஸ்ற் போடும் மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை… புத்திசாலியில்லை

நேரமிருக்கும் மனிதரிடம்
டேட்டா இருப்பதில்லை
டேட்டா இருக்கும் மனிதரிடம் நேரமிருப்பதில்லை
பயான் போடும் ஐடியெல்லாம்
பக்குவமாய் இல்லை
ஜோக் போடும் ஐடியெல்லாம்
ஜொலி டைப் இல்லை

fb வந்த அனைவருமே
ஈமான்தாரி இல்லை
ஈமான் தாரி அனைவருமே
fb வருவதில்லை
fb பிரண்ட் அனைவருமே
இனிய பிரண்ட் இல்லை
இனிய பிரண்ட் அனைவருமே
fb யில் இருப்பதில்லை

எழுதுகின்ற மனிதனுக்கு
ஏதோ லைக் கிடைக்கும்
கொப்பி பண்ணி போடுபவனுக்கு
கூட லைக் கிடைக்கும்.
முழுதாக fb இங்கு
மோசம் என்று இல்லை
மோசமாக நடப்பவனுக்கு
fb யிலும் அதுவே

Mohamed Nizous

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்